கற்க கட்டுமானம், காணொளி கருத்தரங்கு, பாராட்டு மழையில் பில்டர்ஸ்லைன், சீசன் ஒன்று முடிவுக்கு வந்தது.
15 அக்டோபர் 2020   10:14 AM



கொரானா ஊரடங்கு காலக்கட்டத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நமது கட்டுமானத் துறையினருக்கு நாள்தோறும் புதுப்புது தொழிற்நுட்பங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக  பில்டர்ஸ் லைன் நிர்வாகம் “கற்க கட்டுமானம்’ என்னும் ஆன்லைன் காணொளி கருத்தரங்கை ஜூம் ஆப் மூலமாக நடத்தியது.  

அதன்படி மே மாதம் 12 முதல்  செப்டம்பர் 4 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் மாலை 7 மணி முதல் 8 மணி வரை ஜூம் செயலி மூலமாக தமிழகத்தின் ஜாம்பாவான் கட்டடவியல் நிபுணர்களை கலந்து கொண்டு பேசச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கேள்வி பதில் நிகழ்வும் நடந்தது.


இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலமாகவே பொறிஞர்கள், கட்டுநர்கள், மாணவர்கள் என 200க்கும் குறைவில்லாமல் பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி பில்டர்ஸ் லைன் முகநூல் பக்கத்திலும், யூ ட்யூப் சேனலிலும் நேரலையாக ஒளிபரப்பாக அதை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  காணுற்று பயனடைந்திருக்கிறார்கள்.

நிகழ்சியைத் தொடர்ந்து நம்மைத் தொடர்பு கொண்ட இளம் பொறியாளர்கள் பலர் தாங்கள் கல்லூரிகளில் படித்த போது கூட,  இத்தனை விரிவாக, எளிமையாக கட்டுமானத் தொழிற்நுட்ப நுணுக்கங்களைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்கள்.


இளம் பொறியாளர்கள், மாணவர்கள் மட்டுமன்றி சீனியர் பொறியாளர்களுக்கு கூட இந்த நிகழ்ச்சி பயன்பெறும் வகையில் இருந்தது.

அவர்கள் தாங்கள் பணிபுரிந்து வரும் அல்லது மேற் கொண்டு வரும் கட்டுமானத் திட்டங்களில் ஏற்படக் கூடிய சிக்கலான பிரச்சனைகளுக்கு நமது கட்டிட நிபுணர்களிடம் ஆன்லைனிலேயே எளிதாக  தீர்வுகள் பெற்றதாகவும், காசு செலவில்லாமல் தங்களுக்கு விலை மதிப்பில்லாத அரிய கட்டுமான ஆலோசனகளை பெற்றதாகவும் மகிழ்வுடன் நமக்கு தெரிவித்தனர்..


50 தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு ஐம்பாதாவது கருத்தரங்கில்  அனைத்து பேச்சாளர்களும் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்படனர். அனைத்து நிபுணர்களும் பில்டர்ஸ்லைனின் இந்த ஆன்லைன் தொழில்நுட்ப கருத்தரங்கு முயற்சியை பாராட்டினார்கள்.

இலாபநோக்கின்றி கட்டுமானத்துறைக்கு தொடர்ந்து சேவையை செய்து வரும் பில்டர்ஸ் லைனை பாராட்டி பேசினார்கள்.

சீசன் ஒன்றை தொடர்ந்து சீசன் 2- உம் மிக விரைவில் நடத்தவும் ஊக்கம் அளித்தார்கள். 

கற்க கட்டுமானம் ஆன்லைன் நிகழ்வில் கலந்து கொண்டவர் களுக்கும் தங்கள் அனுபவ அறிவை வழங்கிய நிபுணர்களுக்கும், பில்டர்ஸ்லைன் ஆசிரியர் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087323