ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வதில் சிக்கல்
13 அக்டோபர் 2020   11:58 AM



ஆன்லைன் வசதி இல்லாததால், வீடு வாங்குவோர், அது தொடர்பான புகார்களை, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வீடு, மனை விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் வீடு வாங்கும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் சந்திக்கும் பிரச்னைகளை புகாராக அளிக்கலாம். இரண்டு நிலைகளில், பொது மக்கள் புகார் அளிக்க, சட்ட ரீதியாக வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்க, இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டது. சாப்ட்வேர் பிரச்னையால், இந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கொரோனா காலத்தில், பொதுமக்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்துக்கு நேரில் சென்று, புகார் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆன்லைன் முறையில் புகார்களை பதிவு செய்யும் வசதியை, ரியல் எஸ்டேட் ஆணையம் விரைந்து துவக்க வேண்டும் என்று எதிர்பார்த்து, மக்கள் காத்திருக்கின்றனர். இதற்கான நடவடிக்கைகளில், ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087309