அடுக்குமாடி கட்டடம் ஆய்வுக்கு உத்தரவு
24 டிசம்பர் 2019   11:20 AM



சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல், 27 அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதாக தொடரப்பட்ட வழக்கில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆய்வு செய்ய, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

 

சென்னை, ராயப்புரத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.தியாகராஜன், இவர், தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனம், தண்டையார்பேட்டையில், 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது.

 

சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல், இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, கட்டடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன், விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஸ்வரன், இந்த கட்டடம், கடற்கரையில் இருந்து, 80 மீட்டர் தூரத்தில் கட்டப்படுகிறது. பருவ காலங்களில், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் குறிப்பிடும் இடத்தை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். 

 

அதில், விதிமீறல் இருந்தால், ஒரு மாதத்திற்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கையை, 2020 ஜன.,16ல் தாக்கல் செய்ய வேண்டும் என, கூறினர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087271