இந்தியாவின் 7 பெரிய நகரங்களில், நடப்பு 2019-ஆம் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 4 சதவீதம் அதிகரிக்கும் என அனராக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பை, கொல்கத்தா
ரியல் எஸ்டேட் சேவையில் ஈடுபட்டு வரும் அனராக் நிறுவனம் டெல்லி-என்.சி.ஆர், மும்பை, கொல்கத்தா, பூனா, ஐதராபாத், பெங்களூரு, மற்றும் சென்னை ஆகிய 7 பெரு நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை புள்ளி விவரங்கள் மற்றும் அது தொடர்பான மதிப்பீடுகளை வெளியிட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் 7 பெரிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 4 சதவீதம் மட்டும் உயரும் என அனராக் முன்னறிவிப்பு செய்துள்ளது. நான்காவது காலாண்டில் (2019 அக்டோபர் - டிசம்பர்) மொத்தம் 56, 200 வீடுகள் விற்பனையாகும் என்ற மதிப்பீட்டின் படி முழு ஆண்டு விற்பனை 2, 58, 410 வீடுகளாக இருக்கும் என இந்நிறுவனம் கணித்து இருக்கிறது.
நம் நாட்டில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டு இருக்கிறது. இது 6 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாக கருதப்படுகிறது. வீடுகள் விற்பனை நிலவரமும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை எடுத்துக் காட்டுவதாக அனராக் தெரிவித்துள்ளது.
விற்பனை நிலவரம்
இந்திய நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை நிலவரம் குறித்து கால வாரியாக பல்வேறு நிறுவனங்கள் புள்ளிவிவரங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு நிறுவனதுமும் மற்றொன்றுடன் முரண்படுகிறது. எனவே இந்த விrயத்தில் அளிக்கப்படும் புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087305
|