நகர், ஊரைமைப்பு துறையான, டி.டி.சி.பி., அதிகாரிகளின் குளறுபடி காரணமாக, உள்ளூர் அளவில், புதிய மனைப் பிரிவுகளுக்கு, ஒப்புட்தல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மனைகளின், விற்பனை பத்திரங்கள் பதிவுக்கு ஏற்கப்பட மாட்டாது.
அதிகரிக்கும்
இதனால், அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மனைப் பிரிவுகளை உருவாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
மக்களும், அங்கீகாரம் உள்ள மனைகளை வாங்கவே விரும்புவதால், ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பொது கட்டட விதிகள் அறிவிப்புக்கு பின், டி.டி.சி.பி., அதிகாரிகளின் மெத்தனத்தால், மனைப் பிரிவு ஒப்புதல் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், முறையாக உருவாக்கப்பட்ட மனைகளை கூட, விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குழப்பம்
இது குறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது:
புதிய மனைப் பிரிவுகளுக்கு, அங்கீகாரம் கோரி வரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன.
ஆனால், புதிய விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து, ஒப்புதல் வழங்குவதில், அதிகாரிகள் நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பொது கட்டட விதிகள் அறிவிப்புக்கு பின், மனைப் பிரிவு அனுமதியில், உள்ளூர் திட்ட குழுமங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார வரம்பில் குழப்பம் நிலவுகிறது.
டி.டி.சி.பி., தலைமை அலுவலக அதிகாரிகளின் குளறுபடியே, இதற்கு காரணம்.
விதிகளின்படி, சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூட, பரிசீலித்து முடிவு எடுக்காமல், அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர்.
இதனால், மக்கள், சரியான வீட்டுமனை வாங்க முடியாமல், அவதிக்வகு ஆளாகின்றனர். அரசு தலையிட்டு, இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087276
|