3 மாதங்களில் 67 ஆயிரம் வீடுகள் தமிழகத்திற்கு மத்திய அரசு, கெடு
12 டிசம்பர் 2019   03:31 PM



பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில், 67 ஆயிரம் வீடுகள் கட்டும பணிகளை, 2020 மார்ச்சுக்குள் முடிக்கும்படி, தமிழகத்திற்கு மத்திய அரசு, கெடு விதித்து உள்ளது.

 

அனைவருக்கும் வீடு என்ற கொள்கையின்படி, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

 

மத்திய - மாநில அரசின் பங்களிப்பில், குறைந்த விலை வீடுகள் கட்டி தருவது, நிலம் வைத்துள்ள ஏழை மக்களுக்கு, தனி வீடு கட்டித் தருவது ஆகிய, இரண்டு பிரிவுகளில் வீடுகள் கட்டப்படுகின்றன.

 

இந்த இரண்டு பிரிவுகளிலும், தமிழகத்தில், 2,551 குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஏழை மக்களுக்கு, 6.15 லட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டும்.

 

தற்போதைய நிலவரப்படி, 2.34 லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் நிலுவையில் உள்ளன. இதற்க்கான பணிகளை முடிக்க, காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

இது குறித்தும் குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது :

 

முதல் கட்டமாக, 66 ஆயிரத்து, 983 வீடுகள் கட்டும் பணிகளை, 2020 மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என,தமிழகத்திற்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது. 

 

இதில், வாரிய நிலங்களில், 19 ஆயிரம் வீடுகளும், பயனாளிகள் நிலங்களில், 47 ஆயிரத்து, 983 வீடுகளும் கட்டப்பட உள்ளன.

 

நிலுவை வீடுகள் கட்டுவதற்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை அடிப்படையில், வீடுகல் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

இவவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087254