பொது கட்டட விதிகள் தமிழில் எப்போது ?
11 டிசம்பர் 2019   11:59 AM



தமிழக அரசு அறிவித்த பொது கட்டட விதிகள், தமிழில் இல்லாததால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.

 

ஊராட்சி முதல் மாநகராட்சி வரையிலான உள்ளாட்சி பகுதிகளுக்கு, பொதுவான கட்டட விதிகள் உருவாக்கப் பட்டன. பிப்ரவரி, 4ல் இந்த விதிகள் அமலுக்கு வந்தன. இதன் அடிப்படையில், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.

 

பொது கட்டட விதிகளின், ஆங்கில பிரதி மட்டுமே வெளியிட்ட வெளியிடப்பட்டது. நகராட்சி நிர்வாகத் துறை, நகர், ஊரமைப்பு துறை இணையதளங்களில், ஆங்கில பிரதி மட்டுமே கிடைக்கிறது.

 

இது குறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது;

 

பொது கட்டட விதிகள் முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதால், படித்து புரிந்து கொள்வது, மக்களுக்கு சிரமமாக உள்ளது. சாதாரண மக்களும், ஊரக பகுதிகளில் உள்ள உள்ளாட்சிகளின் அதிகாரிகளும், இந்த விதிகளின் தொழில்நுட்ப கூறுகளை புரிந்து கொள்ள சிரமப்படுகின்றனர்.

 

வழக்கமாக, இது போன்ற விதிகள் அறிவிக்கப்படும் போது, அதன் தமிழ் பதிப்பும் வெளியிடப்படும். ஆனால், பொது கட்ட விதிகளின் தமிழ் பதிப்பை வெளியிட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆர்வம் காட்டாமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது.

 

தமிழக அரசு தலையிட்டு, தமிழில் விதிமுறைகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087261