புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் மணல் திருட்டை தடுக்க தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இணையதள வசதியுடன் கூடிய சி.சி.டி.வி.கேமராக்களை பொருத்தி மணல் திருட்டை கண்காணிக்க உத்தர விட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாரயணன், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் திருடப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என தெரிவித்தார்.
முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மணல் குவாரிகளை கண்காணிக்க மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களில் சமூக ஆர்வலர்கள் மற்றும் கனிம வள அதிகாரிகள் இடம் பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆற்று மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் பயன்பாட்டை அதிகரிக்கவும், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் மணல் இறக்குமதி செய்யவும் பரிசீலிக்க வேண்டும்.
ஆற்று மணல் தேவைப்படுபவர்கள், கட்டிட வரைபட அனுமதியை அளித்து தங்களுக்கு தேவையான மணலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மணல் குவாரிகள் கனிம வள விதிகளை முறையாக பின்பற்றுகிறதா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087312
|