தரமான கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்த முதல்வர் உத்தரவு
19 நவம்பர் 2019   12:42 PM



அரசால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு, தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.

 


பொதுப்பணித் துறை வாயிலாக, பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்கள் கட்டப்படுகின்றன. அரசு மருத்துவமனைகள், பள்ளி கட்டடங்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்டவை, இதில் அடக்கம்.


இது மட்டுமின்றி தலைமை செயலகம், அரசு பங்களாக்கள், கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களும் பராமரிக்கப்படுகின்றன.

 

இப்பணிகளுக்கு, அரசு தேஅவியான நிதியை ஒதுக்குகிறது. பொதுப் பணித்துறையில் உள்ள சில அதிகாரிகள், தங்களின் வருமானத்திற்காக, ஒப்பந்ததாரர்களுடன் ரகசிய கூட்டணி அமைக்கின்றனர்.

 

அதிருப்தி

 

தரமற்ற மணல், எம்.சாண்ட், உறுதி தன்மை குறைந்த கட்டுமான கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி, கட்டடங்களை கட்டுகின்றனர்.

 

இதனால், கட்டடங்கள் சில ஆண்டுகளிலேயே சேதம் அடைவது, மழை நீர் ஒழுகுவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுப்பணித் துறை மீது மற்ற துறையினரும், பொதுமக்களும் அதிருப்தி அடைகின்றனர்.


பொதுப்பணித் துறை, முதல்வர் இ.பி.எஸ்., நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. துறை வாயிலாக கட்டப்படும் கட்டடங்கள், நீண்ட காலம் நீடித்து நிலைக்க வேண்டும். துறைக்கும், தன் ஆட்சிக்கும் நல்ல பெயரை பெற்று தர வேண்டும் என, முதல்வர் விரும்புகிறார்.

 

எனவே, தரமான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

முக்கியத்துவம்

 

சமீபத்தில், சென்னையில் நடந்த, பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில், இந்த உத்தரவை, அவர் பிறப்பித்துள்ளார்.

 

முதல்வரின் உத்தரவை பின்பற்ரி, கட்டுமானப் பணிகளில், தரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என, அனைத்து மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கும், துறையின் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087298