மறைமலை நகரில், தனியார் நிறுவன குடியிருப்பு திட்டத்தில், வீடு கிடைக்காதவருக்கு, முன்பணம், 3.78 லட்சம் ரூபாய், இழப்பீடாக, 30 ஆயிரம்ரூபாய் வழங்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மறைமலை நகரில், தனியார் நிறுவன குடியிருப்பு திட்டத்தில் வீடு பெற, பிரேம் ஆனந்த் என்பவர், 3.29 லட்சம் ரூபாயை, 2013ல் செலுத்தினார். இதில், 2014 ஏப்., வரை, கட்டுமான பணி எதுவும் துவங்கப்படவில்லை.இந்நிலையில், குடியிருப்பு திட்டத்தை, மறைமலை நகருக்கு பதிலாக, ஒரகடத்தில் செயல்படுத்த போவதாக, கட்டுமான நிறுவனம் அறிவித்தது. எனவே, தன் முன்பணம், 3.79 லட்சம்ரூபாயை, திருப்பி அளிக்கும்படி, பிரேம் ஆனந்த் கேட்டுள்ளார்.
இதற்கு, கட்டுமான நிறுவனம் மறுத்த நிலையில், பிரேம் ஆனந்த், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த விசாரணை அதிகாரி, சரவணன் பிறப்பித்த உத்தரவு:கட்டுமான பணிகள், குறிப்பிட்ட காலத்தில் துவங்கப்படாததும், அத்திட்டம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டதும் உறுதியாகிறது.
இதில், மனுதாரர் செலுத்திய, 3.29 லட்சம் ரூபாயுடன், 2014 மார்ச் இறுதி வரையிலான காலத்துக்கு, 49 ஆயிரம் ரூபாயை, வட்டியாக வழங்க, கட்டுமான நிறுவனம், ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, முன்பணம், அதற்கு ஓராண்டுக்கு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்ட வட்டியுடன் சேர்த்து, 3.78 லட்சம் ரூபாயை, தற்போது வரையிலான காலத்துக்கு, வட்டியுடன், கட்டுமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும்.இத்துடன், மனுதாரருக்கு இழப்பீடாக, 30 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக, 20 ஆயிரம் ரூபாயையும், கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுஉள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087420
|