பொது கட்டட விதிகளை, நகராட்சிகளில் அமல்படுத்துவது குறித்து, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம், 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ளது.
தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ஏற்ற வகையில், பொது கட்டட விதிகள், பிப்.,4 ல் அறிவிக்கப்பட்டன. இந்த விதிகளை அமல்படுத்த, நகரமைப்புத்துறை, தன் அதிகாரங்களை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.
இதற்கான நடவட்டிக்கைகளை, வீட்டுவசசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை எடுக்காததால், இந்த விதிகளை, உள்ளாட்சிகளில் அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழைய விதிகளையும் கடைப்பிடிக்க முடியாது என்பதால், உள்ளாட்சி அமைப்புகளில், புதிய கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், அனைத்து நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு, பொது கட்டட விதிகள் குறித்து, இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்க, கோவையில் உள்ள, தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் முடிவு செய்தது.
இந்த பயிற்சி முகாம், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில், 28,29ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
இதில், கருத்துரை வழங்குவதற்காக, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின், பல்வேறு பிரிவு அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087437
|