நாடு முழுவதும், ஏழு முக்கிய நகரங்களில், 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படாமலும், அதற்காக பணம் கட்டியோரிடம் ஒப்படைக்கப்படாமலும் இருக்கின்றன என, ஜே.எல்.எல்., இந்தியா என்ற, கட்டுமானத் துறை, கன்சல்டன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜே.எல்.எல்., நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த, 2011ல் துவக்கப்பட்ட கட்டுமானங்களில், டில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வரும் நிறுவனங்கள் தான், குறிப்பிட்ட காலத்தில், வீடுகளை ஒப்ப்டைக்கப்படாத வீடுகளில், டில்லி மற்றும் மும்பை, 91 சதவீதத்தை பெற்றுள்ளன.
சென்னையில், 8,131 வீடுகள்; 4,474 கோடி ரூபாய் முடங்கியுள்ளது; பெங்களூரில் 5,468 வீடுகள்; 2,768 கோடி ரூபாய் முடங்கியுள்ளது.
பிற, பெரு நகரங்களை விட, கோல்கட்டாவில் தான், மிகக் குறைவாக, 384 வீடுகள்; 288 கோடி ரூபாய்க்கு முடங்கியுள்ளது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போலவே, கடந்த ஏப்ரலில், மற்றொரு கட்டுமானத் துறை கன்சல்டன்ட் நிறுவனமான, அனராக், நாடு முழுவதும், 2013-ல் துவங்கிய கட்டுமானத் திட்டங்களில், 5.6 லட்சம் வீடுகள், 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முடங்கியுள்ளன என, தெரிவித்தது.
கட்டுமானத் துறை சந்தித்து வரும் சிக்கல்கள், அவற்றை களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து, விரைவில் தீர்வு காணப்படும் என, மத்திய நிதியமைச்ச்சர், நிர்மலா சீதாராமன், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087434
|