பங்கு பெறும் அனைவருக்குமே 1 ஆண்டு பில்டர்ஸ் லைன் ஆன்லைன் சந்தா இலவசம்.
4 பிரிவுகளில் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசுகள்
*இளம் பொறியாளர்கள்
*அனுபவ பொறியாளர்கள்
* சிவில் துறை பேராசிரியர்கள்
* சிவில் துறை மாணவர்கள்
ஒவ்வொரு பிரிவிலும் மூன்று சிறப்பு பரிசுகள், 5 ஆறுதல் பரிசுகள் (மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்புடைய பரிசுகள்..)
காலஞ்சென்ற பாரத ரத்னா, பழம்பெரும் கட்டுமானப் பொறியாளர் சர். விஸ்வேஸ்வராயா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 பொறீயாளர் தினத்தையயாட்டி நமது பில்டர்ஸ்லைன் கட்டுமானத் துறை தமிழ் மாதஇதழ் சென்ற ஆண்டு போலவே, வருகிற பொறியாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுக்க உள்ள இளம் பொறியாளர்கள், அனுபவ பொறியாளர்கள் மற்றும் அனைத்துப் பொறியியல் கல்லூரி& பாலிடெக்னிக் கல்லூரிகளில், சிவில் துறை பயிலும் மாணவர்கள் சிவில் துறை பேராசிரியர்கள் மற்றும் சிவில் துறை தலைவர்கள் (Civil HOD) இடையே மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை நடத்த இருக்கிறது.
பொறியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் தனித்தனி பிரிவுகளில் இந்தக் கட்டுரைப் போட்டி நடத்தப்படும். தமிழில் எழுதக்கூடிய ஆர்வமுள்ள சிவில்துறை படைப்பாளிகள் இதில் கலந்து கொள்ளலாம்.
இந்த மாபெரும் கட்டுரைப்போட்டி பற்றியச் செய்தியை தங்களுக்குத் தெரிந்த பொறியாளர்கள், கல்லூரியின் சிவில் துறை மாணவர்கள் மற்றும் சிவில் பேராசிரியர்களுக்கு தெரிவித்து அதிக அளவில் கட்டுரையாளர்களை பங்கேற்கச் செய்யும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள், தலைப்புகள், பரிசு விவரம் போன்றவற்றை அடுத்த பக்கத்தில் காண்க... (போட்டியின் முடிவுகள் அக்டோபர் மாத இதழில்.)
போட்டியாளர்கள் தங்களுக்கான பிரிவில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் அதிகபட்சம் 7 பக்கங்களுக்குள் எழுதலாம். (ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளுக்கும் அனுமதி உண்டு)
அ . கட்டுமானப் பொறியாளர்கள் (சீனியர் )
1. நேர மேலாண்மையும், கட்டிடப் பொறியாளரும்.
2. பொறியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தொழில் சூட்சுமங்கள்.
3. ஒரு பொறியாளர் தம் வாடிக்கையாளர்களுடனான அணுகுமுறையும், உறவினையும் எப்படி பேணிக்காக்க வேண்டும்?
4. ஒரு கட்டடம் நீடித்த ஆயுளையும் உறுதியும் பெற மேற்கொள்ள வேண்டிய கட்டுமான முறைகள்..
ஆ . இளம் கட்டுமானப் பொறியாளர்கள் (Jr)
1. சைட் சூபர்வைசர்கள் எதிர் கொள்ளும் சவால்கள்..
2. ‘மகா சிமெண்ட், பொறியாளர்களின் துணைவன்’ ஏன்?
3. நீங்கள் வியக்கும் கட்டிடத்துறை தொழில்நுட்பம்.
இ . சிவில் பேராசிரியர்கள்
1. என்னைக் கவர்ந்த சர்வதேச எழிற்கலைஞர்.
2. சிவில் பொறியாளர்களுக்கு கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்
3. சிறந்த சிவில் துறை பேராசிரியராக விளங்க ஆலோசனைகள்.,
ஈ . சிவில் மாணவர்கள்
1. காலத்தை வென்ற கட்டடப் பொறியாளர் சர்.விஸ்வேஸ்வராயா
2. கட்டுநர்கள், கட்டடப் பொறியியல் படித்திருப்பது அவசியம்.ஏன்?
3. உங்கள் கல்லூரியில் உள்ள சிவில் ஆய்வுக்கூடத்தின் சிறப்பு.
விதிமுறைகள் :
1. ஒவ்வொரு கட்டுரையும் தமிழில் முழு வெள்ளைத்தாளில் 5 முதல் 7 பக்கங்களில் இருத்தல் வேண்டும்.
2. தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுதி இருத்தல் வேண்டும். தபால், கூரியரில்
மட்டும் அனுப்பலாம்.( தபால், கூரியரில் அனுப்பினால் முன்னுரிமை உண்டு)
3. கையயழுத்துப் பிரதிகள், அச்சு வடிவம் இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
4. மின்னஞ்லில் ஸ்கேன் செய்து அனுப்புவோர் buildersline@gmail.com
முகவரிக்கு அனுப்பலாம். சப்ஜெக்டில் - Essay 2019 எனக் குறிப்பிடவும்.
4. கட்டுரை அனுப்பும் போட்டியாளர்கள் தமது புகைப்படம் மற்றும் சுயவிவரக் குறிப்பு, முகவரி, கை பேசி எண், கட்டாயமாக இணைக்க வேண்டும்.
5. வேறு இதழ்களில், இணையத்தில் வெளியான கட்டுரைகள் பரீசிலிக்கப்படாது.
6. கல்லூரி சார்பாக அனுப்புவோர், மொத்தமாக ஒரே கூரியரில் அனுப்பலாம்.
7. பில்டர்ஸ் லைன் மற்றும் மகா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றும்
அதிகாரிகள் & ஊழியர்கள் இதில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
8.ஆசிரியர் குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
9. கட்டுரை அனுப்பக் கடைசி நாள் : 17.09.2019
10. கலந்து கொள்வோர் அனைவருக்கும் பரிசு உண்டு.
முதல் பரிசு : ரூ 5000 + பில்டர்ஸ்லைன்
10 ஆண்டு சந்தா + கட்டுமான நூல்கள்
இரண்டாம் பரிசு : ரூ.3000 +
பில்டர்ஸ்லைன் 5 ஆண்டு சந்தா + கட்டுமான நூல்கள்
மூன்றாம் பரிசு : ரூ.2000 +
பில்டர்ஸ்லைன் 2 ஆண்டு சந்தா + கட்டுமான நூல்கள்
10 பேருக்கு : ஆறுதல் பரிசுகள்
ரூ.1,500 + பில்டர்ஸ்லைன்
1 ஆண்டு சந்தா
25 பேருக்கு : சிறப்பு பரிசுகள்.
ரூ.1,000 + பில்டர்ஸ்லைன்
6 மாத சந்தா
கட்டுரை அனுப்ப கடைசி நாள் 17.09.2019
முகவரி: பில்டர்ஸ்லைன்,
621, அண்ணா சாலை,
ஆயிரம் விளக்கு, சென்னை-6,
பேசி : 88254 79234
buildersline@gmail.com
www.buildersline.in
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087421
|