ரியல் எஸ்டேட் ஆணையம் 308 புகார்களுக்கு தீர்வு
24 ஜூலை 2019   10:39 AM



தமிழகத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், இரண்டு ஆண்டுகளில், 795 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, 308 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

வீடு, மனை விற்பனையை முறைப்படுத்துவதற்காக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் நிறைவேற்றப்பட்டது.இதன் அமலாக்க விதிகள், 2017 ஜூன், 22ல் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில், தமிழகம், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கான, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் துவங்கப்பட்டது. இதில், கட்டுமான திட்டங்கள், 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த ஆணையத்தில், ஜூன், 30 வரை, 1,162 திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,025 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று, 695 ரியல் எஸ்டேட் முகவர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்கள் தொடர்பான புகார்களை, இந்த ஆணையம் விசாரித்து, தீர்வு காண்கிறது.

இவ்வகையில், இதுவரை, 795 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில், கட்டுமான பணி தாமதம், வீடு ஒப்படைப்பதில் தாமதம் தொடர்பான, 106 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கட்டுமான திட்ட மேம்பாட்டாளர்களுக்கு எதிரான, 202 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், கட்டுமான திட்டங்களில், முறைகேடுகள் கட்டுப்படுத்தப்பட்டு, வீடு வாங்கும் மக்களுக்கு, சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளதாக, ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087432