வரைபடத்தில் இல்லாத கூடுதல் பகுதிகள் கட்டுவதும் விதிமீறல் தான்!
20 ஜூலை 2019   06:21 PM



 சொந்தமாய் வீடு கட்டுவது அத்தனை எளிதல்ல என்பது அனைவரும் அறிந்ததே. பொருளாதார பிரச்னையைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம் , திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கும் வீடு வாங்கும்போது, அதற்காக தேர்வு செய்யப்படும் திட்டம் முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என்று பார்க்கிறோம். இது மிகவும் நல்ல வழிமுறை என்றாலும், இதற்கான அடிப்படை விrயங்களில் விழிப்புணர்வு தேவை என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

 

கட்டிய வீட்டில் கூடுதலாய் கட்ட வேண்டுமென்றாலும், திட்ட அனுமதி பெற வேண்டும். வீடு அல்லது வர்த்தகக் கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் திட்ட வரைபடம் தேவை.

 

பொதுவாக, வீடு வாங்க நீங்கள் தேர்வு செய்த திட்டத்துக்கு சி.எம்.டி.ஏ.,டி.டி.சி.பி., உள்ளாட்சி ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா என்று பார்ப்பீர்கள். இதற்காக, திட்ட அனுமதி வரைபடத்தை வாங்கி ஆய்வு செய்வீர்கள். வரைபடம் விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அரசுத் துறைகள் ஒப்புதல் அளிக்கும்.

 

எனவே, அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வரைபடத்தின் அடிப்படையில், ஒரு வீட்டில் அறைகளின் மொத்த பரப்பளவு என்ன என்பதுடன் இருந்துவிடாமல், ஒவ்வொரு அறைகளுக்கான அளவுகளும் வரை படத்தையயாட்டி அமைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

 

இதில், சில இடங்களில் அறைகளின் அளவுகள் அதிகமாக வைத்து கட்டப்பட்டு இருக்கும். வரைபடத்தில், ஒரு படுக்கை அறையின் பரப்பளவு, 150 சதுர அடியாக குறிப்பிடப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு இருக்கும். ஆனால், நேரில் அளந்து பார்க்கும்போது, அறையின் பரப்பளவு, 175 சதுர அடியாக அதிகரித்து இருக்கும்.

 

வரைபடத்தின் அடிப்படையில்,ஆவணத்தில், அறையின் அளவு, 150 சதுர அடியாகவ்வே இருக்கும், ஆனால், கூடுதலாக, 25 சதுர அடி இருப்பது ஆவணத்தில் வராது. இந்த கூடுதல் பகுதிக்கான கட்டுமான செலவுக்காக ஒரு குஷீப்பிட்ட தொகையை கொடுத்தால் போதும் என்று கட்டுமான நிறுவனம் கூறலாம்.

 

இது போன்ற சமயங்களில், வீடு வாங்குவோர்,சில ஆயிரம் ரூபாய்களை ரசீது இல்லாமல் கொடுப்பதால், 25 சதுர அடி கூடுதலாக கிடைக்கிறதே என்று வாங்கி விடுகின்றனர். வரைபடத்தில், குறிப்பிட்ட அளவைவிட, கூடுதலாக கட்டப்படும் ஒவ்வொரு சதுர அடி கட்டுமானமும், விதிமீறலாக தான் வரையறை செய்யப்படும்.
வீட்டின் அறையில், கூடுதல் பரப்பளவு கிடைக்கிறது என்பதற்காக, ஒவ்வொருவrர்ருதும் விதி மீறலுக்கு தெரியாமல் கொடுக்கும் ஆதரவு தான், அதிக அளவிலான அடுக்குமாடி கட்டடங்கள் விதிமீறல் கட்டடங்கள் முடங்கும் நிலையை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.

 

கவனத்திற்கு:

கூடுதல் பகுட்த்திதீய்யை கட்டமாக்க அதாவது, விரிவுபடுத்துவதாயினும் திட்ட அனுமதியை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் அல்லது நகர திட்ட இயக்கம் அமைப்பிடம் அனுமதி மீண்டும் பெற வேண்டும்.

 

கூடுதல் கட்டடம் கட்டுவதாயின் விண்ணப்பம், ‘பி’ மூலம் அனுமதி பெற வேண்டும். விதிமுறை மீறாமல் கட்டடங்களைக் கட்டுவது உரிமையாளரின் பொறுப்பும் கூடஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களுடன் சேர்ந்து புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கு உரியது. வீட்டை விரிவாக்கம் செய்யவும் விண்ணப்பம், ‘பி’ உடன் கட்டடத்தின் திட்ட வரைபடத்தையும் இணைத்து வழங்க வேண்டும்.  

 

விண்ணப்பம், ‘சி ’  என்பது மிகப் பெரிய அளவில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொகுப்புக் கட்டடங்களுக்கு உரியது.  

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087404