சி.எம்.டி.ஏ.,வில் 413 கட்டுமான நிறுவனங்கள் பதிவு வீடு வாங்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பு
20 ஜூலை 2019   06:18 PM



பொது கட்டட விதிகளின்படி,சென்னை பெருநகரில் ஜூன், 4 வரை, 413 கட்டுமான நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 

தமிழகத்தில் பொது கட்டட விதிகள், பிப்.,4ல் அறிவிக்கப்பட்டன. இந்த விதிகளின் அமலாக்கத்துக்கான நடவடிக்கைகளை, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., விரைவுபடுத்தி உள்ளது.

இதன்படி, தொழில் முறை வல்லுனர்கள், கட்டுமான நிறுவனங்களை பதிவு செய்யும் பணிகள், பிப்.,12ல் துவங்கின.

இதில், சிவில் பொறியாளர்கள் , கட்டட அமைப்பியல் வல்லுனர்கள் உள்ளிட்ட எட்டு வகை வல்லுனர்கள், 14 நிலைகளில்  பதிவு செய்யப்படுகின்றனர்.     

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வல்லுனர்கள் குறித்த விபரங்களை , சி.எம்.டி.ஏ., இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.

இதன்படி, தற்போது வரை, 413 கட்டுமான நிறுவனங்கள் மேம்பாட்டாளர்கள் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் திட்டங்கள், பொது கட்டட விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் என்பதால், வீடு வாங்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087399