சென்னையில், நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில், குறைந்த விலை வீடுகள் விற்பனை, ஐந்து சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக, சந்தை நிலவர ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு நிறுவனமான, நைட் பிராங் அறிக்கை, சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில், 2018 ஜன, - ஜூன் காலத்தில், 6,523 வீடுகள் அடங்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், இது, 7,762 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று, 2018 ஜன.,-ஜூன் வரையிலான ஆறு மாதங்களில், 8,585 வீடுகள் விற்பனையானது. இந்த ஆண்டில், இதே காலகட்டத்தில் இது, 8,979 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் குறைந்த விலை வீடுகள் விற்பனையே, இதில் அடங்கியுள்ளது. இதனால் ,வீடுகள் விற்பனையில், பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087428
|