சென்னை:பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 173 கோடி ரூபாயில், 1,632 வீடுகள் கட்டப்பட உள்ளன.
சென்னை, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 2010ம் ஆண்டு, 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டன. தற்போது, 16 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இதில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு இடங்களில் இருந்து, மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அதே வளாகத்தில், அனைவருக்கும் வீடு திட்டத் தின் கீழ், 1,632 வீடுகள் கட்ட, குடிசை மாற்று வாரியம் திட்டமிட்டு ள்ளது.
இந்த வீடுகள், மத்திய அரசின், ‘குளோபல் ஹவுசிங் டெக்னாலஜி சேலஞ்ச் ’ திட்டத்தில் கட்டப்படுகின்றன.இத்திட்டம், இந்தியாவில், ஆறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், முதல்கட்டமாக, 1,632 வீடுகள், இரண்டு பிரிவுகளாக, பெரும்பாக்கத்தில் கட்டப்பட உள்ளன. முதல் பிரிவில், 2.50 ஏக்கர் பரப்பளவில், 52 கோடி ரூபாயில், 480 வீடுகளும்; இரண்டாவது பிரிவில், 8.50 ஏக்கர் பரப்பளவில், 121.20 கோடி ரூபாயில், 1,152 வீடுகளும் கட்டப்பட உள்ளன.
ஒவ்வொரு வீடும், 10.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 400 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. ஐந்து மாடி கொண்ட கட்டடத்தில், ஒரு மாடியில், 16 வீடுகள் வீதம், ஒரு பிளாக்கில், 96 வீடுகள் கட்டப்பட உள்ளன.
மூன்று மாதத்தில், கட்டுமான பணி துவங்க உள்ளதாக, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறினர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087406
|