அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கான அனுமதி , 90 நாட்களில் வழங்கப்படும் என, தமிழகாரசின், நகர் ஊரமைப்புத் துறையான , டி.டி.சி.பி., அறிவித்துள்ளது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், டி.டி.சி.பி., பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதி, குறிப்பிட்ட கால வரம்புக்குள் கிடைப்பதில்லை என, புகார் கூறப்படுகிறது.
ஆனால், கட்டுமான திட்டங்களுக்கு, விண்ணப்பம் பெற்றதில் இருந்து, 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என , மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், தமிழக அரசு, விண்ணப்பம் பெற்றதில் இருந்து, 45 நாட்களுக்குள், திட்ட் அனுமதி வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இந்த காலவரம்புகள் முறையாக பின்பற்றப் படுவது இல்லை.
இந்நிலையில், கட்டுமான திட்ட அனுமதிக்கான கால அவகாசம் குறித்த அட்டவணையை, டி.டி.சி.பி., வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
சாதாரண கட்டடம்- 30 நாள்
சிறப்பு கட்டடம் - 45 நாள்
தொழிலக கட்டடம் - 45 நாள்
நிறுவன கட்டடம் - 45 நாள்
அடுக்குமாடி கட்டடம் - 90 நாள்
மனைப்பிரிவு ஒப்புதல் - 60 நாள்
முழுமை திட்டத்தில் நில வகைபாடு மாறுதல் - 60 நாள்
விரிவான வளர்ச்சி திட்டத்தில் நில வகைபாடு மாறுதல் - 60 நாள்
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றதில் இருந்து, இந்தக் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087398
|