தென் மாவட்டங்களில் உள்ள கட்டுமான பொறியாளர் சங்கங்களில் அதிக எண்ணிக்கை உடையதும் பாரம்பரிய மிக்கதுமான AMCE அசோசியேஷன் ஆப் மதுரை சிவில் இன்ஜினியர்ஸ்) தற்போது மதுரையில் முதன்முறையாக கட்டுமானத் துறை கண்காட்சி ஒன்றை BUILD EX 2019 என்ற பெயரில் மிக பிரம்மாண்டமாக துவக்கியிருக்கிறார்கள்.
மதுரையில் புகழ் பெற்ற வணிக வளாகமான மடிடிசியாவும் (MADITTISIA) AMCE அமைப்பும் இணைந்து இக்கண்காட்சியை நடத்தி இருக்கிறது. ஏப்ரல் 26,27,28,29 ஆகிய நான்கு நாட்களுக்கு இக்கண்காட்சியை ஏறத்தாழ 5000 பேர் பார்வையிட்டுச் செவ்லார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
100க்கும் மேற்பட்ட அரங்குகளில் கட்டுமானப்பொருட்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்று இருக்கும் இக்கண்காட்சி இன்று( 26.4.2019 ) காலை 11 மணிக்கு துவக்கப்பட்டது.
AMCE சங்கத்தின் தலைவர் பொறி.அறிவழகனிடம் பில்டு எக்ஸ்போ 2019 கண்காட்சியின் ஏற்பாடுகள் கேட்ட போது, “”எங்கள் உறுப்பினர்களின் ஒருமித்தக் கருத்து, ஆதரவும், உற்சாகமும் தான் இதற்கு காரணம். ஏம்சிஇ இன் செயலாளர் திரு. வெங்கட் ராமன், எக்ஸ்போ கமிட்டியின் சேர்மன் பொன். ரவிச்சந்திரன், துணைத் தலைவர் குமரேஷ் பாபு, தொழில்நுட்ப கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளர்.பொறி. பாஸ்கர் ஆகியோரது முயற்சியால் எங்கள் துவக்கக் கண்காட்சி பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கின்றது.
தென் மாவட்டம் முழுவதிலுமிலிருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
கட்டுமானத்துறையினரும், , வீடுகட்டும் பொதுமக்களும் பெரும் திரளாக இந்த நான்கு நாட்களில் வருவார்கள்.
இந்த கண்காட்சி முழுக்க முழுக்க வியாபார நோக்கில் இல்லாமல் நவீன தொழில் நுட்பங்களை பொறியாளர்களும், பொது மக்களும் அறிய செய்யும் வகையில் நடத்த திட்ட மிட்டிருக்கிறோம். அதனால் தான் கண்காட்சி நாட்களில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் தொழில் நுட்பக் கருத்தரங்கு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
பசுமைக் கட்டிட உத்திகள், குறைந்த செலவில் வீடுகட்டும் உத்திகள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, மிக எளிமையான முறையில் வீடுகட்டும் ஆலோசனைகள் போன்றவை இதில் வழங்கப்பட்டன. கட்டுமான பொருட்கள் மட்டுமின்றி கட்டுமானக் கருவிகள், சாதனங்கள் போன்றவைகளும் இடம் பெற்றுள்ளன. வீடு, மனை வாங்குவதற்கான கடன் அளிக்கக் கூடிய நிதி நிறுவனங்களும் அரங்குகளை அமைத்துள்ளன.
மொத்தத்தில் இக்கண்காட்சியால் பலதரப்பட்ட மக்களும் பயனைடவார்கள் என்றார்
மதுரை மடிடிசியா அரங்க்கில் நடைபெறும் பில்ட் & பிராப்பர்டி கண்காட்சியின் மேலதிக விவரங்கள் அறிய..
பொன் ரவிச்சந்திரன் - 99942 77 555