கன்னியாகுமரி கீழசித்திரங்கோடு பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'கல்குளம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில், சட்டவிரோத கல் குவாரி நடத்தப்படுகிறது. இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்; குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தமிழக ஆறுகளில், மணலை சட்டவிரோதமாக எடுத்து, இயற்கை வளத்தை அழித்து வருகின்றனர். மலைகளை உடைத்து, 'எம் - சாண்ட்' தயாரிக்கின்றனர்.
தமிழகத்திற்குள், 'எம் - சாண்ட்' கொண்டு செல்ல தடை இல்லை. பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சோதனைச் சாவடிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என அந்த அமர்வு தெரிவித்திருக்கிறது.
இதனால் மாநில எல்லைகளில் தனி சோதனை சாவடிகள் அமைத்து மணல் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087397
|