ஊராட்சிகள் முதல் மாநகராட்சிகள் வரையிலான பகுதிகளில், டி.டி.சி.பி.,யில், உள்ளூர் திட்ட குழுமங்கள், மண்டல அலுவலகங்கள் நிலையிலேயே, கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளன.அதனால், ஆறு மாடி உயரம், பரப்பளவில், 27 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, உள்ளூர் அளவிலேயே அனுமதி வழங்கலாம்.
குடியிருப்பு, வணிகம் மற்றும், நிறுவன பயன்பாட்டு கட்டுமான திட்டங்களுக்கும், மனைப்பிரிவு களுக்கு அனுமதி வழங்குவதிலும், இந்த அதிகார பகிர்வை பயன்படுத்தலாம். இதன் அடிப்படையில், உள்ளூர் அதிகாரிகள் செயல்படுவதற்கான நடைமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, நகர் மற்றும் ஊரமைப்புத்துறை ஆணையர், பிறப்பித்துள்ளார். இதையடுத்து, டி.டி.சி.பி.,யில் புதிய விதிகளின்படி, கட்டுமான திட்ட அனுமதி பணிகள் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கலாம்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087496
|