சி.எம்.டி.ஏ.,வில், கட்டுமான திட்ட அனுமதிக்காக வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை, திடீரென சரிந்துள்ளதாக தெரிகிறது. விண்ணப்பங்களை பதிவு நிலையில் ஏற்கும் நடைமுறைகள் மாற்றப்பட்டதே, இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சென்னை பெருநகரில், சிறப்பு கட்டடங்கள், அடுக்குமாடி கட்டுமான திட்டங்கள், தொழிலக கட்டடங்களுக்கான அனுமதி பெற, சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பிக்க வேண்டும்.இங்கு, விண்ணப்பம் மீது பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்து நிலையிலும், வளர்ச்சி விதிகளுடன் ஒத்து போகும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே, திட்ட அனுமதி வழங்கப்படும்.ஆனால், பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், பெயரளவுக்கு விண்ணப்பத்தை தாக்கல் செய்து, விற்பனை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த துவங்குகின்றன.
இந்நிலையில், 2017-ல், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறும் திட்டத்தை, சி.எம்.டி.ஏ., துவங்கியது. இதிலும், பழைய நடைமுறையே தொடர்ந்தது.ஆனால், தற்போது திடீரென, புதிய விண்ணப்பங்கள் வருவது, வெகுவாக குறைந்துள்ளது.
இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
முன் எப்போதும் இல்லாத வகையில், சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பங்கள் பெறுவதில், பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.பொது கட்டட விதிகளும், அமலுக்கு வந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.
கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் மேம்பாட்டாளர்கள், அதில் பங்கேற்கும், தொழில்முறை வல்லுனர்கள் ஆகியோர், பதிவு செய்து, உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், இரண்டு மாதங்களாக, புதிய விண்ணப்பங்கள் வருவது வெகுவாக குறைந்துள்ளது.
பதிவாகும் விண்ணப்பங்களையும், அதிக நாட்கள் நிலுவையில் வைக்க முடியாத அளவுக்கு, கட்டுப்பாடுகள் வந்துள்ளன. இதனால், பெயரளவுக்கு வரும் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087484
|