ஏழு பெரிய நகரங்களில், கடந்த 5 ஆண்டுகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 28% குறைந்தது.
29 மார்ச் 2019   11:08 AM



இந்தியாவின் ஏழு பெரிய நகரங்களில், கடந்த 5 ஆண்டுகளில் (2014-2018) அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 28 சதவீதம் குறைந்து இருக்கிறது.

மும்பை, கொல்கத்தா
டெல்லி-என்.சி.ஆர், மும்பை, கொல்கத்தா, பூனா, ஐதராபாத், பெங்களூரு, மற்றும் சென்னை ஆகிய 7 பெருநகரங்ளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, அந்த நகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் 2.48 லட்சம் வீடுகள் விற்பனை ஆகி இருக்கிறது. 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 28 சதவீதம் குறைவாகும். அப்போது விற்பனை 3.43 லட்சம் வீடுகளாக இருந்தது. மேலும்  அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வீடுகள் சப்ளை 64 சதவீதம் சரிவடைந்து 1.95 லட்சம் வீடுகளாக  உள்ளது. 2014-ம் ஆண்டில் புதிய வீடுகள் சப்ளை 5.45 லட்சமாக இருந்தது.

ஏழு பெரிய நகரங்களின் கடந்த 2018-ஆம் ஆண்டில் மட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வீடுகள் சப்ளை 67,850- ஆக உள்ளது. 2017- ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 77 சதவீத வளர்ச்சியாகும். இதில் தேசிய தலைநகர் பகுதியில் (என்.சி.ஆர்) அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் சப்ளை அதிக பட்சமாக 16 சதவீதம் உயர்ந்துள்ளது. அடுத்து மும்பை மற்றும் பூனா ஆகிய நகரங்களில் சப்ளை 17 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

விற்பனை நிலவரம் இந்திய பெருநகரங்களில்,அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை நிலவரம் குறித்து காலவாரியாக பல்வேறு நிறுவனங்களை புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்த புள்ளி விவரங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை.

ஒவ்வொரு நிருவனமும் மற்றொன்றுடன் முரண்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் அளிக்கப்படும் புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087488