அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு
05 மார்ச் 2019   03:52 PM



புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை மார்ச் 5- சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

அம்மா உணவகம்
சென்னையில் பணிபுரியும் பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லா (இலவச) உணவு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 8-ந் தேதி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 43 ஆயிரத்து 631 கட்டுமானத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 400 அம்மா உணவுகள்களில் ( அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள அம்மா உணவகங்கள் நீங்கலாக) இலவச உணவு வழங்கும்  திட்டத்தை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

உணவு பரிமாறிய முதல்-அமைச்சர்
அப்போது கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணவுகளை பரி மாறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து பெட்டகம்
சென்ஐன்னனை எழும்பூரில் உள்ள அரசு தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கான அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்ட நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மின்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், அம்மா தாய்-சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதற்கு அடையாளமாக 10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது . இது கர்ப்பிணிபெண்களுக்கு 3-வது மாதம் மற்றும் 5-வது மாதங்களில் வழங்கப்படுகிறது.

பணி ஆணை
நிகழ்ச்சியில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,300 உதவி டாக்டர்கள் , 126 இளநிலை உதவியாளர்கள், கருணை அடிப்படையில் 9 இளநிலை உதவியாளர்கள், 95 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் மற்றும் 29 தட்டச்சர்களுக்கு பணி ஆணை வழங்கும் அடையாளமாக அனைத்து பணிகளில் இருந்தும் பலருக்கு பணி ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087489