பொது கட்டட விதிகளை தமிழில் வெளியிடுவதில் சிக்கல்
21 பிப்ரவரி 2019   11:38 AM



தமிழக அரசு அறிவித்த பொது கட்டட விதிகளை, தமிழில் வெள்யிடுவது குறித்து முடிவு எடுப்பதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஊராட்சி முதல் மாநகராட்சி வரை, அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்குமான, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த விதிகளை, பிப்., 4ல் அரசு அறிவித்தது. இது விதிகள், சில தொழில் நுட்ப விஷயங்களை துல்லியமாக தெரிவிப்பதற்காக, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.வளர்ச்சி விதிகளின் தொகுப்பு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வில், புத்தக வடிவில் விற்கப்படுகிறது.

இந்த விதிகள், ஆங்கிலத்தில் உள்ளதால், கட்டுமானத்துறை வல்லுனர்கள் மட்டுமே, படித்து பயன்படுத்த முடியும். பொது மக்கள், இதன் தமிழ் பிரதிகளை கேட்டு, தினமும் வந்து செல்கின்றனர்.


இதுகுறித்து, கட்டுமானத்துறையினர் கூறியதாவது:

இதுபோன்ற விதிகள், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, பின், அதன் தமிழ் வடிவம் வெளியாகும்.தற்போது, விதிகளின் ஆங்கில தொகுப்பு பிரதி, அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பயன்பாட்டுக்கு, அச்சு பிரதி விற்பனைக்கு வருமா: தமிழ் பிரதி விற்பனைக்கு வருமா என்று கேட்டால், சி.எம்.டி.ஏ., தரப்பில், முறையான பதில் வருவதில்லை.

இந்த விதிகளின் தொகுப்பை, மொழி பெயர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன; அதை எப்படி செய்வது என்பதில் வீட்டுவசதி துறை அதிகாரிகள், இன்னும் முடிவு எடுக்கவில்லை.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் மத்தியில் நிலவும் குழப்பமே இதற்கு காரணம்.இதனால், புதிய விதிகளை, சாதாரண மக்கள் படித்து, அறிய முடியாத சூழல் நிலவுகிறது.

இவ்வாறு ,அவர்கள் கூறினர்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087499