ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் 2019 ஐ முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்டார். இதனை துணை முதல்வரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
இந்த விதியின்படி, கட்டட அனுமதிகளைப் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கட்டடம் மற்றும் மனைப் பிரிவு விதிகளானது, மனைப் பிரிவுகளை நெறிமுறைப்படுத்தவும், கட்டடங்களின் அமைப்பு, உயரம், கட்டுமானப் பரப்பு, வடிவமைப்பு உள்ளிட்ட கட்டுமானம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தி, முறையான திட்டமிட்ட இருப்பிடங்கள் அமைவதற்கு உதவுகின்றன.
பழைய விதிகள்: தமிழகத்தில் ,மனைப் பிரிவு மற்றும் கட்டடத்துக்குத் தேவையான அனுமதி பெறுவதற்கான விதிகள், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971, சென்னை மாநகராட்சிச் சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 மற்றும் பிற மாநகராட்சிகளுக்கான சட்டங்களில் தனித்தனியாக உள்ளன.
…இந்த விதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே தொகுப்பாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைக்கப்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நோக்கம் என்ன: மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டு வசதியை அனைவரும் பெற வேண்டும் என்பதே புதிய விதிகளின் நோக்கமாகும். வீடு கட்டுவதற்காக அனுமதிக்கப்படும் தளப்பரப்பு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பக்க இடைவெளிகள் குறைக்கப்பட்டு கட்டடத்தின் உயரமும், தளங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
…இதன் மூலம், ஏழை எளிய மக்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். மேலும், கட்டடப் பாதுகாப்பை உறுதி செய்யவும்,விதிமீறல்களைத் தொடக்க காலத்திலேயே கண்டஷீந்து அவைகளைத் தவிர்க்கும் வகையிலும் பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
புதிய விதிகள் சொவது என்ன: திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி தொடர்பான அனைத்து விதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு மலைப்பகுதிகள் நீங்கலாக அனைத்து மாவட்டங்களுக்கும் அவை பொருந்தும். மூன்று குடியிருப்புகள் அல்லது 750 மீட்டர் கொண்ட 12 மீட்டர் வரை உயரத்துக்கு உள்பட்ட குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கட்டடங்களுக்கு பணி நிறைவுச் சான்ஷீதழ் தேவையில்லை. மற்ற கட்டடங்களுக்கு கட்டாயம் தேவை.
கட்டடங்கள் ஒப்புதல் அளித்த வரைபடத்தின்படி கட்டப்படுவது உறுதி செய்யப்படும். கட்டடத்தின் அடிபீடம் மற்றும் கடைசி தளம் அமைக்கும் போது கட்டடங்கள் ஆய்வு செய்யப்படும்.
கண்காணிப்பு கேமரா: கட்டட அனுமதியின் கால அளவு திட்ட அனுமதிக்கு ஏற்ப ஐந்து ஆண்டுகளாகவும், மேலும் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், குழந்தைகளுக்கான தடையற்ற சூழல் அமைய தேவையான வழிவகைகள் உருவாகப்பட்டுள்ளன,.
மழைநீர் வடிக்கால் சேமிப்பு, சூரிய சக்தி சேமிப்பு, கண்காணிப்பு கேமராக்கள், நீச்சல் குளங்களுக்கான விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
திங்கள் முதல் நடைமுறை: புதிய விதிகள் அனைத்தும் திங்கள்கிழமை (பிப்.4) முதல் நடைமுறைக்கு வருகின்றன.ஏற்கனவே அனுமதிக்காக விண்ணப்பித்தோரின் மனுக்கள் முந்தைய விதிகளிபடியே பரிசீலிக்கப்படும். புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் புதிய விதிகளின்படியே ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.