பத்திர பதிவுக்கு புதிய கெடுபிடி
06 பிப்ரவரி 2019   05:34 PM



பத்திரப் பதிவுக்கு ஏற்கப்படும் அடையாள அட்டைகளின் எண்ணிக்கை, 21ல் இருந்து, ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சொத்து விற்பனை உள்ளிட்ட அனைத்து வகை பத்திரப்பதிவு பணிகளும், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. பதிவுக்கு வருவோரிடமிருந்து, மத்திய, மாநில அரசுகள் வழங்கும், 21 வகையான அடையாள அட்டைகள் ஏற்கப்படும் என, பதிவுத்துறை அறிவித்து இருந்தது.

இந்நிலையில் நேற்று, ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் ஆகிய, ஐந்து அடையாள அட்டைகள் மட்டும் ஏற்கப்படும் என, பதிவுத்துறை மீண்டும் அரிவித்துள்ளது.
ஐந்து வகையான அடையாள அட்டைகளை, ஆன்லைன் முறையில், உடனடியாக சரி பார்க்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பால், அரசு மற்றும் தனியார் துறைகள், பணியாளர்களுக்கு வழங்கும் அடையாள அட்டை, பட்டா புத்தகம், தியாகிகள் அடையாள அட்டை ஆகியவை பத்திரப் பதிவுக்கு பயன்படுத்த முடியாததாகி விட்டன.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087502