கட்டுமான நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு
06 பிப்ரவரி 2019   04:20 PM




சென்னை:கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னையில் உள்ள, மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், வேளச்சேரியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'நந்தனத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், மடிப்பாக்கத்தில் வீடு வாங்க, 20.84 லட்சம் ரூபாய் செலுத்தினேன்.

காலக்கெடு முடிந்தும், வீடு வழங்கவில்லை. நான் செலுத்திய தொகையுடன், 7.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வேண்டும்' என, கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், கட்டுமான நிறுவனம் ஆஜராகவில்லை.இதை, நீதிபதி பாஸ்கரன், நீதித்துறை உறுப்பினர், லதா மகேஸ்வரி ஆகியோர் விசாரித்து, 'கட்டுமான நிறுவனம், முறைகேடாக வர்த்தகம் செய்துள்ளது. மனுதாரர் செலுத்திய, 20.84 லட்சம் ரூபாயுடன் இழப்பீடு, 2 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாயை, கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087500