சென்னை முதல், மாமல்லபுரம் வரை, இ.சி.ஆர்., எனப்படும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி மேற்கொள்ளப்படும், கட்டுமான திட்டங்கள் குறித்து, தனியான அமைப்பு வாயிலாக, ஆய்வு செய்ய, தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிமுறைகள், அமலில் உள்ளன.
இதன் அடிப்படையில், அனைத்து கட்டுமான திட்டங்களுக்கும், முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும்.
தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 2011ம் ஆண்டு, கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகள், அமலில் உள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு மட்டுமே, அரசின் அனுமதி கிடைக்கும்.மாநில அளவில் உள்ள, இதற்கான ஆணையத்தின் கூட்டம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில், கடலோர பகுதிகளில் செயல்படுத்துவதற்காக, அனுமதி கோரிய திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:மாநில, மாவட்ட அளவிலான ஆணையத்தில், அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைவிட, கிழக்கு கடற்கரை சாலையில், அதிக எண்ணிக்கையில், கட்டுமான பணிகள் நடப்பது, தெரிய வருகிறது.இத்திட்டங்களால், அந்தந்த பகுதிகளில், என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இப்பகுதியின் தாங்கும் அளவுக்கு உட்பட்டு தான், திட்டங்கள் உள்ளதா என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது.
எனவே, சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான, கிழக்கு கடற்கரை சாலையில், தற்போது நடந்து வரும் கட்டுமான பணிகள், 'ரிசார்ட்' மற்றும் சுற்றுலா மைய கட்டுமான திட்டங்கள் குறித்து, தனியான அமைப்பு வாயிலாக, ஆய்வு செய்ய வேண்டும்.இதற்கான நடவடிக்கைகள் எடுக்கவும், ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087497
|