சென்னை:கட்டுமான பணிகளில் கிடைக்கும் உபரி மண்ணை, அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்றால், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், கட்டுமான பணிகளுக்கு, அஸ்திவாரம் தோண்டும் போது கிடைக்கும் உபரி மண், அனுமதி இல்லாமல், பிற பகுதிகளுக்கு, எடுத்துச் செல்லப்படுகிறது.
மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின், உபரி மண்ணை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் பலர், அனுமதி இன்றி, அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனிமத் தொகை மற்றும் உரிமக் கட்டணம் செலுத்தாமல், மண்ணை அகற்றுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, 'சட்டத்திற்கு புறம்பாக, மண் அள்ளிச்செல்லும் வாகனங்களை, விடுவிக்கக் கூடாது' என, உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர், அ.சண்முக சுந்தரம் கூறியதாவது:சிறுகனிம விதிகள் சட்டம் - 1959 படி, மாவட்ட ஆட்சியரிடம், உரிய அனுமதி பெற்ற பின் தான், மண்ணை அகற்ற வேண்டும்.0.
விதி மீறி, மண்ணை அப்புறப்படுத்தினால், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மேம்படுத்துதல் சட்டம் மற்றும் சிறுகனிம சலுகை விதிகள் படி, சம்பந்தப்பட்ட நபர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும், மணலை அள்ளிச் செல்லும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087485
|