கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வறை தையூர், எழிச்சூரில் தயார் என அறிவிப்பு
04 பிப்ரவரி 2019   10:16 AM



சென்னை புறநகரில், தையூர், எழிச்சூர் ஆகிய பகுதிகளில், தலா, 1,000 பேர் பயன்படுத்தும் வகையில், கட்டுமான தொழிலாளர்களுக்காக, தூங்கும் அறைகள் தயார் நிலையில் உள்ளதாக, கட்டுமான துறை சங்கங்களுக்கு, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

சென்னைக்கு, கட்டுமான பணிகளில் ஈடுபட, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமான பணியாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள், பெரும்பாலும் கட்டுமான பணி நடக்கும் இடங்களிலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.

இதற்காக, தற்காலிக கூடாரங்கள், குடிசைகள் அமைக்கப்படுகின்றன. இதில், பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை மிக மோசமான நிலையில் உள்ளன.
கோரிக்கை
இவர்களில், பணி சூழலுக்கு ஏற்ப, முறையான தங்குமிடங்களை ஏற்பாடு செய்து தர, அரசு தலையிட வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 'சென்னை புறநகரில், பழைய மாமல்லபுரம் சாலை தையூர், ஸ்ரீபெரும்புதூர் அருகே எழிச்சூர் ஆகிய இடங்களில், தலா, 1,000 பேர் தங்கும் வகையில், தூங்கும் இடங்கள் கட்டப்படும்' என, 2014ல் அரசு அறிவித்தது.அதன்படி, தையூர், எழிச்சூர் பகுதிகளில், கட்டுமான பணியாளர் தங்குமிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, கட்டுமான துறை சார்ந்த சங்கங்களுக்கு, கட்டுமான தொழிலாளர் நல வாரிய செயலர், பாஸ்கரன் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:தையூர், எழிச்சூர் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டுமான பணியாளர் தங்குமிடங்களை, 30 கி.மீ., சுற்றளவில் உள்ள கட்டுமான திட்டங்களில் பணிபுரிவோர், பயன்படுத்திக் கொள்ளலாம். 

நிர்ணயம்
நபர் ஒருவருக்கு, நாள் ஒன்றுக்கு, 20 ரூபாய் என்ற அடிப்படையில், இங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள, அந்தந்த பகுதிகளில், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087493