அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளில் 50 ஆயிரம் சதுர அடிக்கு கீழ் கள அலுவலரே வரன்முறைப்படுத்தலாம் என்று டிடிசிபி செயலாளர் ராஜேஷ் லகானி அனைத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து, டிடிசிபி சார்பில், அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்த ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலானோர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலான நிலையில், சில ஆயிரம் பேர் மட்டும் மனைகளை வரன் முறைப்படுத்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ,அனைத்து தரப்பினரும் வரன்முறைப்படுத்த ஏதுவாக புதிய திட்டம் ஒன்றை டிடிசிபி எனப்படும் நகர் ஊரமைப்பு இயக்குனரகம் வகுத்துள்ளது.
இது தொடர்பாக, டிடிசிபி செயலாளர் ராஜேஷ் லக்கானி சார்பில் அனைத்து துணை இயக்குநர்,உதவி இயக்குநர், கள அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி 50 ஆயிரம் சதுர அடிக்கு கீழ் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறைப்படுத்த கள அலுவலரே நேரில் ஆய்வு செய்து எந்த வித நிபந்தனையும் இல்லாமல் அனுமதி கொடுக்கலாம்.
அனுமதி இல்லாத வீட்டுமனைகளுக்கான வழிகளை ஏற்படுத்தும் வகையில் சாலை வசதிகளை அள வீடு செய்து கள அலுவலரே குறிப்பிட வேண்டும். மேலும், அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு திறந்த வெளி இடம் விடுவதை சதுர வடிவில் தான் விட வேண்டும். அங்கொன்றும், இங்கொன்ரும் தங்களது இஷ்டப்படி நிலத்தை விடக்கூடாது இதைக் கள அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அதேபோன்று 2 லட்சம் சதுர அடிக்கு கீழ் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு உதவி இயக்குனர்,துணை இயக்குனர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பித்தால் அவர்கள் வரன்முறைப்படுத்துவார்கள். அதே போன்று 2 லட்சம் சதுர அடிக்கு மேல் இருந்தால் அந்த அங்கீகாரம் இல்லாத மனைகளுக்கு ஆன்லைனில் கமிrனர் தான் வரன்முறைபடுத்த முடியும். அவர்கள், எந்த வித நிபந்தனையும் இல்லாமல் நேரில் ஆய்வு செய்து கட்டணத்தை நிர்ணயம் செய்து வரன்முறைபடுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087526
|