சென்னையில் வீடு விற்பனை 3 சதவீதம் உயர்வு ரியல் எஸ்டேட் சந்தை ஆய்வில் தகவல்
09 ஜனவரி 2019   02:40 PM



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,ஐந்து ஆண்டுகளுக்கு பின், வீடுகள் விற்பனை, 3 சதவீதம் உயர்ந்துள்ளது.தனியார் ரியல் எஸ்டேட் சந்தை நிறுவன ஆய்வில், இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் வீடுகள்,அலுவலக கட்டடங்கள் விற்பனை குறித்த,சந்தை நிலவர ஆய்வில், நைட் பிராங்க் என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


முதல்முறை
இந்நிறுவனம், 2018 ஜூலை - டிச., காலத்துக்கான, சந்தை நிலவர ஆய்வு அறிக்கையை,சென்னையில்,நேற்று வெளியிட்டது.
இது குறித்து,அந்நிறுவனத்தின் சென்னை பிரிவு இயக்குனர்,காஞ்சனா கிருஷ்ணன் கூறியதாவது:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,வீடுகள் விற்பனை,2018 ஜூலை- டிச., காலத்தில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது; புதிய வீடுகள் விலை, 3 சதவீதம் குறைந்ததே இதற்கு காரணம்.வீடுகள் விலை, 2012க்கு பின், முதல் முறையாக குறைந்து உள்ளது.
தென்சென்னை பகுதியில்,2017ஐ விட, 2018ல் வீடுகள் விலை, 4 சதவீதம் வரை குறைந்துள்ளது.விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை,19 ஆயிரமாக உள்ளது. இது,முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்,23 சதவீதம் குறைவு.


அரசின் முடிவு

அதேநேரம்,2017 உடன் ஒப்பிடுகையில்,2018ல் புதிய குடியிருப்பு திட்டங்களின் அறிமுகம்,20 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.
பொது கட்டட விதிகள்,எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு குறியீட்டு விவகாரத்தில்,அரசின் முடிவு தெரிந்தவுடன், புதிய திட்டங்களை அறிவிக்க கட்டுமான நிறுவனங்கள் காத்திருக்கின்றன.


மேலும், வரும் ஜூன் வரையிலான கால கட்டத்தில். லோக்சபா தேர்தல் காரணமாக,புதிய திட்டங்கள் வருகையும்,வீடு விற்பனையும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின், சர்வதேச முதலீட்டார்கள் மாநாடு காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில்,புதிய பன்னாட்டு நிறுவனங்கள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, புதிய முதலீடுகள் வருவது குறைந்துள்ளதால்,அலுவலக இடங்கள் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.இதனால், புதிய அலுவலக வளாகங்கள் கட்டும் திட்டங்கள் குறைந்துள்ளன.


இவ்வாறு அவர் கூறினார்.    

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087524