வீடு ஒப்படைக்கவில்லை: 12 பேருக்கு இழப்பீடு
05 ஜனவரி 2019   06:13 PM



தனியார் கட்டுமான நிறுவன திட்டத்தில், பணம் செலுத்தி, வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட , 12 பேருக்கு, இழப்பீடு வழங்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தர விட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூரில், மார்க் என்ற தனியார் நிறுவனம்,பிருந்தாவன் என்ற பெயரில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, 2011ல் அறிவித்தது. இதில் வீடுகள், 2013ல் ஒப்படைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.


இதன்படி,அத்திட்டத்தில் பணம் செலுத்தியோருக்கு, குறிப்பிட்ட காலத்தில்,வீடு ஒப்படைக்கப்படவில்லை.இதனால் பாதிக்கப்பட்டோர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் அடிப்படையில் விசாரணை நடத்திய, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி சரவணன், 12 பேருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
இதன்படி, மனுதாரர்கள் செலுத்திய பணத்தை, 8.70 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். இத்துடன்,ஒவ்வொரு மனுதாரருக்கும் 1 லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு தொகையாக தலா, 20 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.


மேலும், யு.டி.எஸ்., பத்திரப்பதிவை ரத்து செய்ய, மனுதாரர்கள் நடவடிக்கை எடுக்க , அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087525