குடியிருப்பு கட்டடங்களுக்கு வழங்கப்பட்டது போல, வணிக பயன்பாட்டுக்காக கட்டடங்களுக்கும் , கூடுதல், எப்.எஸ்.ஐ., சலுகை வழங்குவதற்கான , அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், குடியிருப்பு கட்டடங்களுக்கு, நிலத்தின் மொத்த பரப்பளவில் , 1.5 மடங்கு வரை கட்டடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டு வந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரி வந்தனர்.
இதையேற்று, குடியிருப்பு கட்டடங்களுக்கான, தளப்பரப்பு குறியீட்டு எண் எனப்படும், எப்.எஸ்.ஐ., 1.5ல் இருந்து, 2 மடங்காக அதிகரிக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இதற்கான அரசாணை, அக்., 26ல் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கும் , இந்த சயிலுகையை விரிவாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று, சாதாரண வணிக கட்டடங்கள், நான்கு மாடி வரையிலான ,சிறப்பு வகை வணிக கட்டடங்கள், தொகுப்பு மற்றும் அடுக்கு மாடி கட்டடங்களுக்கும், கூடுதல், எப்.எஸ்.ஐ., சலுகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087535
|