கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டினால், திட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என, மாநகராட்சி உத்தரவு பிறப்பித்து இருப்பதால், சென்னையில் நெருக்கடியான பகுதிகளில் வீடு கட்டுவோருக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பெரும் பாலான இடங்களில், புதிதாக வீடு கட்டுவோர், அதற்கான, மணல், ஜல்லி, செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை, சாலையிலேயே கொட்டி இருப்பு வைக்கின்றனர்.
இதனால், கட்டுமான பணிகள் முடியும் வரை, அந்த தெருவில், போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சினைகளால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து புகார் வந்தால், சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம், பணம் வாங்கிக்கொண்டு, அதிகாரிகள் அமைதியாகிவிடுவதாக புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்டுமான பொருட்களைகொட்டி, சாலை, நடைபாதையை ஆக்கிரமித்தல், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு வழங்கப்பட்ட திட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சிலருக்கு, நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கட்டட அமைப்பியல் பொறியாளர், பாலமுருகன் கூறியதாவது:
தொடர் கட்டட பகுதிகள், சிறிய அளவிலான மனைகளில் வீடு கட்டுவோர், இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படுவர். நெருக்கடியான பகுதிகளில் வீடு கட்டுவோரின் சூழல், நடைமுறை நிலவரம் என்ன என்பதை புரியாமல், அதிகாரிகள் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
சிறிய அளவிலான மனையில், வீடு கட்ட அனுமதி வழங்கும் போதே, அதில் முன்பக்கம் இவ்வளவு நிலம் காலியாக இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087536
|