வீடு வழங்க தாமதம் : ரூ.50 ஆயிரம் இழப்பீடு
04 டிசம்பர் 2018   11:28 AM



வீடு வழங்க தாமதம் செயத் கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நுகர்வோர் நிநீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தியில் ,அம்பத்தூரைச் சேர்ந்த மாலதி என்பவர், 14.50 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்க, 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்ப்பதிவு செய்தார். 


தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ,மீதி தொகை செலுத்தினார். ஒப்பந்தப்படி வீடு வழங்காமல், கட்டுமான நிறுவனம் தாமதம் செய்தது.
தாமத காலத்தில், வாடகை வீட்டில் தங்க வேண்டிய நிலையால், 1.40 லட்சம் ரூபாய் செலவானது.


தாமதமாக வீடு வழங்கிய கட்டுமான நிறுவனம், 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, திருவள்ளுவர்   மாவட்ட நுகர்வோர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் கட்டுமான்ன நிறுவனம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை.


இந்த வழக்கில் , நீதிபதி பாண்டியன் பிறப்பித்த உத்தரவு:
கட்டுமான நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது.
வீடு வழங்க காலதாமதம் செய்த கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு, இழப்பீடு, 50 ஆயிரம் ரூபாய், வழக்குச் செலவு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087530