பொது கட்டட விதிகளுக்கு அவசர சட்டம்?
01 டிசம்பர் 2018   10:33 AM



பொது கட்டட விதிகளை, அவசர சட்டம் வாயிலாக அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளுக்கும் பொதுவான, வரைவு பொது கட்டட விதிகளை,தமிழக அரசு, ஜூலை, 26ல் அறிவித்தது.
இதன் மீது, ஆகஸ்ட், 20 வரை, பொது மக்களின் கருத்துகள் பெறப்பட்டன.


இந்த கருத்துகளின் அடிப்படையில், வரைவு பொது கட்டட விதிகளில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்களை இறுதி செய்ய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், வரைவு பொது கட்டட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அரசின் ஒப்புதல் பெற்று, பொது கட்டட விதிகளை அமல்படுத்த, ஊரமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
சமீபத்தில் சட்டசபை கூட்டம் நடக்க வாய்ப்பில்லை என்பதால், அவசர சட்டம் வாயிலாக, பொது கட்டட விதிகளை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து , அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


இதற்கும், அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான வழி முறைகளை, நகராட்சி நிர்வாகத்துறை   உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087527