‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள், மனை வரன்முறைக்கான கடைசி வாய்ப்பை பயன்படுத்த முடியாததால், அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம், 2017 மே, 4ல் அறிவிக்கப்பட்டது.
இத்ற்கான அவகாசம், நவ., 3ல், முடிவுற்றது. இதில், தமிழகம் முழுவதும், 7.75 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக, நவ., 12 முதல், ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த அவகாசம்நேற்றுடன் முடிந்தது. ஐந்து நாட்களில் மட்டும், 1.75 லட்சம் பேர், மனை வரன்முறை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களுக்கு, மேலும் அவகாசம் வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க, தென்னகமைய துணை தலைவர், ராம்பிரபு கூறியதாவது:
கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில், நவ., 15, 16ல், ஆன்லைன் முறையில் ,விண்ணப்பிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதனால், கடைசி வாய்ப்பை மக்களால் பயன்படுத்த முடியவில்லை.
எனவே, புயல் பாதித்த மாவட்டங்களில் உள்ளோர், மனை வரன்முறை கோரி விண்ணப்பிக்க, மேலும் சில நாட்கள் அவகாசம் தர, டி.டி. சி.பி., முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினாrர்.
ரூ. 47 கோடி வசூல்
தமிழகத்தில், அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்துக்காக, பிரத்யேக இணையதளம் துவக்கப்பட்டது. இதில் விண்ணப்பம் செய்வோர், பரிசீலனை கட்டணமாக, 500 ரூபாயை, ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
இதன்படி, 9.15 லட்சம் விண்ணப்பங்களுக்கு, பரிசீலனை கட்டணமாக, 47.25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இதுதவிர, மனை வரன்முறை, வளர்ச்சி கட்டனத்திலும், அடுத்தடுத்து பெருமளவு வருவாய் கிடைக்கும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087474
|