வேப்பனப்பள்ளி காப்புக்காட்டு பகுதியில் இருந்து, நேரலகிரி சோதனைச்சாவடி வழியாக, கர்நாடகா மாநிலத்துக்கு, மணல் கடத்தல் தடையின்றி நடக்கிறது, என, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி காப்புக்காட்டில், பல இடங்களில் ஓடைகள் உள்ளன. மழைகாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இந்த ஓடைகளில், பல இடங்களில் மணல் தேங்குகிறது.
இதை, இந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள், வனத்துறையுனருக்கு மாமூல் கொடுத்து, நேரலிகிரி சோதனைச்சாவடி வழியாக, கர்நாடகா மாநிலத்திக்கு லாரியில் கடத்துகின்றனர்.
இதற்காக, சோதனைச்சாவடியில் உள்ளவர்களுக்கும், மாமூல் கொடுக்கின்றனர்.
மேலும், வனப்பகுதியில் உள்ள மண் மற்றும் கிரானைட் கற்களும், இந்த சோதனைச்சாவடி வழியாக, கர்நாடாவுக்கு கடத்தி செல்லப்படுகிறது.
வனப்பகுதி ஓடையில் மணல் தங்கி, அதில் தண்ணீர் தேங்கினால், சுற்றுவட்டார விவசாய நிலங்களில் உள்ள கிணறு, போர்வெல்லில் நிலத்தடி நீர்மட்டம் மேலே வந்து, மூன்று போகமும் விளைச்சல் நடக்கும் .
ஓடைய்ல் சிறிதளவு மணல் தென்பட்டாலும், அதை உடனடியாக அள்ளி விடுவதால், வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087461
|