நகரங்களில், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு, மலிவு விலையில் வீடுகள் வழங்கும் திட்டங்கள் அதிகரிக்கப்படும், என, தமிழக துணை முதல்வர், பன்னீர் செல்வம் பேசினார்.
தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை மற்றும் ஜெர்மனி அரசின், ஜி.ஐ.இசட்., நிறுவனம் இணைந்து, ஏற்பாடு செய்திருந்த அனைத்து தரப்பு மக்களும் வாழும் வருங்கால நகரங்கள் என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னையில் நேற்று துவங்கியது.
கருத்தரங்கை துவக்கி வைத்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் 48.45 சதவீதம் பேர் நகரங்களில் வசிகின்றனர்.
விஷன் - 2023
சென்னைத மதுரை கோவையில் தான் நகரங்களில் வசிப்போர் அதிகம்.
இதற்கேற்ப நகர்புற கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டி உள்ளது. விஷன் - 2023 திட்டத்தில், கல்வி, குடிநீர் சுகாதாரம் போன்ற வசதிகள் மேம்படும்.
தமிகத்தில், ஐந்து லட்சம் குடும்பங்களுக்க, வீடு வழங்கப்பட்டுள்ளது.
நகர்புறத்தில், 14 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும்.நகரங்களில், குடிசை பகுதியில் வசிப்போருக்கு, குடிசை மாற்று வாரியம் வாயிலாக, இலவச வீடுகள் வழங்கப்படுகின்றன.
வாடகை வீடுகளில் வசிக்கும் குறைந்த வருவாய் பிரிவினருக்குத மலிவு விலையில் வீடுகள் வழங்குவதற்கான திட்டங்கள் அதிகரிக்கப்படும்.
விவாதம்
நகர மயமாக்கலில், நிலம், கட்டமைப்பு வசதிகள், குடிசை மற்றும் வாடகை குடியிருப்போர் நலன் அகியவற்றில் எழும் பிரச்சனைகள் குறித்து, விரிவாக விவாதிக்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த கருத்தரங்கம் அமையும் என நம்பலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் தஜி.ஐ.இசட்., நிறுவனத்தின் இந்திய இயக்குனர், ஜூலிரிவரி,வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளர், கிருஷ்ணன், குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர், சண்முகம் உள்ளிட்டோர் கருத்திரை வழங்கினர்.
இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பல்கலை பேராசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஜெர்மனி, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த, நகர்புற வீட்டுவசதி மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087468
|