வரைவு பொது கட்டட விதிகளில் 47 திருத்தங்களை செய்ய முடிவு
17 நவம்பர் 2018   03:16 PM



தமிழக அரசு வெளியிட்ட வரைவு பொது கட்டட விதிகளில், 47 திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.இதற்கான இறுதி முடிவெடுக்கும் கூட்டம். வரும் 22ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் ஊராட்சி முதல் மாநகராட்சி வரை அனைத்து பகுதிகளிக்கும் பொதுவான கட்டட விதிகள் உரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு பொது கட்டட விதிகள் ஜூலை,26ல் வெளியிடப்பட்டுத ஆக., 20 வரை, பொது மக்கள் கருத்துகள் பெறப்பட்டன.


இக்கருத்துகள் அடிப்படையில் வரைவு பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்வது குறித்து பரிந்துரைக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் குழு அமைக்கப்பட்டது. உதவிக்கு, தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் பரிந்துரை அடிப்படையில், வரைவு பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுதாவது:


வரைவு பொது கட்டட விதிகளில் திருத்தம் கோரி 93 பேர் கருத்துக்களை அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில், 47 இடங்களில் திருத்தங்கள் செய்யவும், 14 பிரிவுகளை நீக்கவும், தொழில்நுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., வின் வளர்ச்சி விதிகளில் உள்ள சில கருத்துகளை, இவற்றில் சேர்க்க, பரிந்துரைத்துள்ளது. 


 இது வி­ஷயத்தில், மற்றதுறைகளின், ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகளின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. திருத்தங்களை இறுதி செய்வதற்கான கூட்டம் வரும், 22ம் தேதி நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087476