வளர்ச்சி விதிகளின் படி தகுதி பெறாத விண்ணப்பங்கள்த ஆன்லைன் திட்டத்தில் பதிவு செய்யப்படுவதை தடுக்க புதிய கட்டுபாடுகளை விதிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
நகர் ஊரமைப்பு சட்டப்படி, சிறப்பு கட்டங்கள் அடுக்கமாடி கட்டடங்கள், லே- அவுட்களுக்கு ஒப்புதல் பெறுவோர்த சி.எம்.டி.ஏ.த விடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில், விண்ணப்பங்களை பெறுவதிலும், பதிவு செய்வதிலும் முறைகேடுகளை தடுக்க, ஆன்லைன் திட்டம் துவக்கப்பட்டது.
இதிலும், குறிபிட்ட சில அடிப்படை தகவல்கள் அளித்து, விண்ணப்பங்களை பதிவிடலாம். இதனால் தகுதி குறித்த சரி பார்ப்பு இன்றி அனைத்து விண்னப்பங்வகளும் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன.
கேள்விக்குறி
இதனால், கூடுதல் விபரங்கள் சரிபார்ப்பு, மேலிட சிபாரிசு என, சி.எம்.டி.ஏ. வுக்கு அழுத்தம் கொடுத்து தகுதி இல்லாத திட்டங்கள் கூட ஒப்புதல் பெறப்படுகின்றன.
இது, ஆன்லைன் திட்டதின் அடிப்படை தன்மையை கேள்விக் குறியாக்கி வருகிறது.
இந்நிலையில் ஆன்லைன் முறையில் திட்ட அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான இணைய தளத்தில் சில மாறுதல்கள் செய்வது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதன்படி தற்போது நடைமுறையில் இருக்கும் நில உபயோகம் வகைபாட்டு விபரங்கள் ஆன்லைன் விண்ணப்பதிட்ட இணையதளத்தில் இணைக்கப்படுகிறது.
இதேபோன்று வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், வருவாய் துறை உள்ளிட்ட,ஒன்பது துறைகள் வசம் உள்ள நிலங்களின் சர்வே எண் விபரங்களும்,ஆன்லைன் திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன.
மாறுதல்கள்
இதனால், விண்ணப்பத்தை பதிவிடும் முதல் நிலையிலேயே சம்பந்தப்பட்ட நிலம் உத்தேச திட்டத்துக்கு தகுதியானதா என்பது தெரிந்துவிடும்.
இதில் தகுதி பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பதிவாகும் வகையில் மாறுதல்கள் செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து கட்டுமானத்துறை வல்லுனர்கள் கூறியதாவது:
விண்ணப்பங்கள் பதிவாகும் முதல் நிலையிலேயே, உத்தேச திட்டத்துக்கு அந்நிலம் தகுதியானதா வேறு துறையின் ஆட்சேபம் உள்ளதா என்பது போன்ற விபரங்களை பார்ப்பது சரியான நடைமுறையாகும்.
இதே போன்று வரை படங்களை ஆன்லைன் முறையில் சரிபார்ப்பதிலும் விண்ணப்பதாரர்களே விபரங்களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்துடன் தற்போது நடைமுறையில் உள்ள ஆவணங்களை மட்டும் கேட்டு பெறுவதும் தற்போதைய நிலத்தின் அளவில் ஒ.எஸ்.ஆர்., பகுதியை கணக்கிடுவது போன்ற மாறுதல்கள் தேவை.
இது விஷயத்தில், தற்போதைய சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
தகுதி இல்லாத விண்ணப்பங்களுக்குத கிடுக்கிப்பிடி போடும் இத்தகைய முயற்சிகளுக்குத கட்டுமானத்துறை முழு ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087450
|