மனை விற்பனை பதிய புதிய கட்டுப்பாடு அமல்
17 நவம்பர் 2018   02:26 PM



உரிய கட்டணங்கள் செலுத்தப்பட்டு, உள்ளாட்சிகள் வழங்கிய இறுதி ஆணை உள்ள மனைகளின் விற்பனை பட்த்திரங்களை மட்டுமே, பதிவுக்கு ஏற்க வேண்டும் என பதிவுத்துறை உத்திரவிட்டுள்ளது.


இது குறித்து பதிவுத்துறை பிரப்பித்துள்ள உத்தரவு:


சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்புத்துறையானத டி.டி.சி.பி., ஆகியவை,   அங்கீகாரமில்லா மனைகளை வரன்முறை செய்கின்றனர்.
இதில், இத்துறைகள் குறிப்பிட்ட சில கட்டணங்களை வசூலித்து விட்டு, கொள்கை அளவிலான ஒப்புதல்களை வழங்குகின்றன.


இதன்பின், உரிய வளர்சிசி கட்டணங்களை, உள்ளாட்சி அமைப்புகளிடம் செலுத்தி இறுதி ஆணை பெற வேண்டும். இந்த இறுதி ஆணை பெறாமல், கொள்கை அளவிலான ஒப்புதலை காட்டி, மனை விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.


இது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகள், உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் புகார் தெரிவித்தன. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் இறுதி ஆணை இல்லாத வரன்முறை மனைகளின் பத்திரங்களை, பதிவுக்கு ஏற்க கூடாது.


உள்ளாட்சிகள் வழங்கிய இறுதி ஆணைநகலை, பத்திரத்துடம் இணைத்து, ஸ்கேன் செய்ய வேண்டும். இந்த உத்தரவை, சார்- பதிவாளர்கள் முறையாக அமல்படுத்துவதை, மாவட்ட பதிவாளர்களும் , டி.ஐ.ஜி., க்களும் உறுதி செய்ய வேண்டும்.


இவ்வாறு, பதிவுத்துறை உத்திரவிட்டுள்ளது.

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087458