தமிழகத்தில் 20 அடி அகல சாலையுள்ள பகுதிகளில் மூன்று மாடிகள் வரை வீடுகள் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்க உள்ளது. அதற்கேற்ப பொது கட்டட விதிகளில் மாற்றம் செய்யபபட்டுள்ளது.
தமிழகத்தில், ஊராட்சிகள் முதல் மாநகராட்சிகள் வரையிலான பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதியை முறைப்படுத்த தமிழக அரசு ஜூலைத 26ல், வரைவு பொது கட்டட விதிகளை வெளியிட்டது. இது தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வு செய்யத ஐ.ஏ.எஸ்., அதிகார்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு அளித்த பரிந்துரைகளை நகராட்சி நிர்வாகத் துறை முதன்மை செயலர் தலைமையிலான அதிகாரிகள் , சமீபத்தில் ஆய்வு செய்தனர் . இந்நிலையில் கட்டடள்களுக்கானத எப்.எஸ்.ஐ., எனப்படும், தளப்பரப்பு குறியீட்டை, 105 மடள்கில் இருந்து இரண்டு மடங்காக அதிகரித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த சலுகையை உள்ளடக்கி வரைவு பொது கட்டட விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அதில், புதிய திருப்பமாக சாலை அகலம் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வீடு மாற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர், பி.மணிசங்கர் கூறியதாவது:
வரைவு பொது கட்டட விதிகளில், 30 அடி அகல சாலை உள்ள பகுதிகளில்,1.75 மடங்கு வரயிலான, எப்.எஸ்.ஐ., அனுமதி, தற்போது, இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அங்கரிக்கப்பட்ட, பெரும்பாலான, லே- அவுட்களில்,20 அடி சாலை தான் உள்ளது. எனவே அப்பகுதிகளில் மனை வாங்கியோர், எப்.எஸ்.ஐ., சலுகையை பயன்படுத்த முடியாது என்பதால் விதிகளை தளர்த்த கோரினோம்.
இந்த கோரிக்கையை ஏற்று, வரைவு பொது கட்டட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இதை, வீட்டுவசதி துறை உயர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதன்படி அங்கீகாரம் உள்ள மனைகளில் 20 அடி அகல சாலையை ஓட்டிய மனைகளில் அடித்தளத்துடன் மூன்று மாடிகள் கட்ட முடியும்.
இதுவரை ஆறு வீடுகள் கட்டப்பட்ட 2,400 சதுர அடி நிலத்தில், இனி எட்டு வீடுகளை கட்ட முடியும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அரசின் முடிவால்த அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடுகள்ன் விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087459
|