ஆன்லைன் முறையில் திட்ட அனுமதி பெறும் நடைமுறைக்குத வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகியவை வராததால், அவற்றின் திட்டங்களில், வீடுகள் விற்பனைக்கு சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கட்டுமான திட்டங்களுக்கு, அனுமதி வழங்கும் நடைமுறைகளை விரைவு படுத்தத அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடைமுறை
இதற்காக, கட்டுமான திட்ட விண்ணப்பம் மற்றும் வரைபடங்களை, ஆன்லைன் முறையில் பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் பதிவு இன்றி நேரடியாக விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதைத அனைத்து தனியார் கட்டுமான நிறுவனங்களும் ஏற்று, அதற்கேற்ப செயல்ப்படுகின்றன.
ஆனால் வீட்டு வசதி வாரியம்த குடிசை மாற்று வாரியம் போன்ற, அரசு சார்ந்த நிறுவனங்கள், புதிய நடைமுறையை ஏற்க தயங்குகின்றன.
நிறுத்தம் நிலை
இதுகுறித்து, டி.டி.சி.பி.த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஆன்லைன் முறையில், விண்ணப்பங்கள், வரைபடங்கள் தாக்கல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதற்கு தனியார் கட்டுமான நிறுவனங்கள் ஒத்துழைக்கின்றன.
வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகிய அரசு சார்ந்த நிறுவனங்கள், ஒத்துழைப்பது இல்லை.
இதனால், அவர்களின் புதிய திட்டங்களுக்கு, முறையான அனுமதி வழங்குவது நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முடங்கும்
இதேநிலை தொட்ர்ந்தால், அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டங்களில் வீடுகள் விற்பனையாவது முடங்கும். பிற துறைகளிடமிருந்து, அடிப்படை வசதிகளுக்கான இணைப்பு பொறுவது சிக்கலாகும்.
இதுகுறித்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வாயிலா, அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087457
|