அதிகாரிகளின் வசூல் வேட்டையால்த அங்கீகாரமில்லா மனைகள் வரன்முறை திட்டம்த முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்த அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டம் த 2017 மேத 4ல் அறிவிக்கப்பட்டது. இதில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்த நவ.த 3ல் முடிகிறது.
மாநிலம் முழுவதும் நடந்த கணக்கெடுப்பில்த 13 லட்சம் அங்கீகாரமில்லாத மனைகள் இருந்தும்த இதுவரை, ஐந்து லட்சம் மனைகள் மட்டுமேத வரன் முறைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்திட்டத்துக்கான கட்டணம்த விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில்த பொதுமக்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் நகர் மற்றும் ஊரமைப்பு துரையான டி.டி.சி.பி.த மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல்த மக்களை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வரண்முறை திட்டத்தில் விண்ணப்பித்து காத்திருப்போர் கூறியதாவது:
அரசு அறிவித்தபடி சதுர மீட்டருக்கு ஊராட்சி பகுதிகளில் 55 ரூபாய்: பேரூராட்சிகளில் 105 ரூபாய்; நகராட்சிகளில் 310 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊராட்சி பகுதிகளில் 800 சதுர அடிமனையை வரன்முறை செய்யத 4,088 ரூபாய் செலுத்தினால் போதும்.
ஆனால் இதற்கான விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவுகள் எடுக்கத 20 ஆயிரம் ரூபாய் வரை கேட்டு அதிகாரிகள் நிர்பந்திக்கின்றனர்.
இதற்காக தரகர்களையும் வைத்துள்ளனர். அவர்கள் வழியாக செல்லும் விண்ணப்பங்கள் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு செல்கின்றன . மற்ற விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்படுகின்றன.
கூடுதல் தொகை குறித்து, பொது மக்கள் விசாரித்தால்த துணை முதல்வர் பெயரை பயன்படுத்தி உள்ளூர் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
இந்நிலை தொடர்ந்தால் வரன்முறை திட்டம் முடங்கி விடும். டி.டி.சி.பி.த உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிர்ச்சனையை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மனைகள் வரமுறைக்கான அவகாசம்த நவ., 3ல் முடியும் நிலையில் மீண்டும் நீட்டிப்பு வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087480
|