மனை வரன்முறைக்கான பதிவு நிறுத்தம்
16 நவம்பர் 2018   05:48 PM




அங்கீகாரமில்லாத மனைகள் வரன்முறை திட்டத்துக்கான அவகாசம் முடிந்ததை அடுத்து ஆன்லைன் முறையில்லான விண்ணப்ப பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனையை பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம்த 2016ல் தடை விதித்தது.
இதையடுத்துத மனைகள் வரன்முறை திட்டத்தை  தமிழக அரசு 2017 மேத 4ல்த அறிவித்தது.
ஆறு மாதங்களுக்கு அறிவிக்கப்பட்ட இத்திட்டம், அடுத்தடுத்து இரண்டு முறை எனத 18 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம், நவ.த3 இரவுத12:00 மணியுடன் முடிந்தது.


இத்திடத்துக்காக துவங்கப்பட்ட இணைய தளத்தில்த மனை மற்றும், லே - அவுட் உரிமையாளர்களின் விண்ணப்பங்களை , பதிவிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நவ.த 3 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலிக்கத நகர் மற்றும் ஊரமைப்பு துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில்த இது வரை, 52 ஆயிரத்துத 600 லே - அவுட்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன .
இதன்படி, 22 லட்சம் மனைகள் வரன்முறைக்கு தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.


வரன்முறை திட்டம் முடிக்கப்பட்டதை அடுத்துத விண்ணப்பிக்காத மனைகளின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.
இதுகுறித்துத டி.டி. சி.பி.த உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


அங்கீகாரமில்லாத மனைகளைத சிறப்பு சலுகைகள் அடிப்படையில், வரன்முறை செய்யும் திட்டம் முடிவுக்கு வந்து உள்ளது.
இதில்த விண்ணப்பிக்காத மனைகளின் உரிமையாளர்கள், அந்தந்த பகுதி உள்ளாட்சிகள் வாயிலாகத திறந்தவெளி ஒதுக்கீட்டு நில்த்துக்கான கட்டணங்களை செலுத்தி, வரன்முறை சலுகை கோரலாம்.
பதிவு சட்ட திருத்தத்தின் படித அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனை பத்திரங்கள் பதிவுக்கு ஏற்கப்பட மாட்டாது.
மேலும்த அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கீகாரமில்லா மனைகள்,லே- அவுட்கள் விபரங்கள்த உள்ளாட்சிகள் வயிலாக பெறப்பட்டுத ஒட்டு மொத்தமாக வரன்முறை செய்வதற்கான வாய்ப்புகளையும் பரிசீலித்து வறுகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2087467