சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, குஜராத், நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் நிறுவப்பட்டுள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை இன்று திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இதன் உயரம் 182 மீட்டர். தற்போதைய அளவில் இதுவே உலகின் மிக உயரமான சிலையாகும்.
இந்த சிலையை உருவாக்க 70 ஆயிரம் டன் சிமெண்ட், ஆயிரக்கணக்கான டன் எக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. சிலையின் வெளிப்புற பூச்சுக்காக 1,700 டன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி (97 மீட்டர்) சிலையை விட இரு மடங்கு உயரம் கொண்டது இந்த சிலையென்பது குறிப்பிடத்தக்கது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2087369
|